இந்த காணொளியில் உள்ள தகவல்கள்
ஏன் நாம் அடுத்தவர்களுக்கு தீமை செய்ய கூடாது ? அடுத்தவர்களுக்கு தீமை செய்பவருக்கு என்ன நடக்கும் ? நமக்கு தீமை செய்பவர்களை நாம் எப்படி தண்டிப்பது ?
அறத்துப்பால் - இன்னா செய்யாமை | Arathupal - Inna Seiyaamai
குறள் : 311
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
Sirappeenum Selvam Perinum Pirarkku Innaa
Seyyaamai Maasatraar Kol
குறள் : 312
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa
Seyyaamai Maasatraar Kol
குறள் : 313
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்
Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum
குறள் : 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
Innaasey Thaarai Oruththal Avarnaana
Nannayanj Cheydhu Vital
குறள் : 315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை
Arivinaan Aakuva Thunto Piridhinnoi
Thannoipol Potraak Katai
குறள் : 316
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்
Innaa Enaththaan Unarndhavai Thunnaamai
Ventum Pirankan Seyal
குறள் : 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam
Maanaasey Yaamai Thalai
குறள் : 318
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்
Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo
Mannuyirkku Innaa Seyal
குறள் : 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku Innaa
Pirpakal Thaame Varum
குறள் : 320
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar
Noyinmai Ventu Pavar